திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேடசந்தூர் டி.எஸ்.பி திருமதி . துர்கா தேவி, தலைமையில் போதைப் பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், போதை பொருட்களை ஒழிக்கும் வழிமுறைகள் குறித்தும் முகாம் நடைபெற்றது. மேலும் இம்முகாமில் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி .ரேணுகா தேவி, கணினி குற்றங்கள் குறித்தும், போலியான கடன் செயலிகளை (Loan App) நம்பி அவற்றை பதிவிறக்கம் செய்து கடன் பெற வேண்டாம் எனவும், அவற்றால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும், மேலும் இணைய வழி குற்றங்கள் குறித்து புகார் செய்ய 1930 என்ற எண்னை அழைக்கும் படியும், இணையதளம் வாயிலாக புகார் செய்ய www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
