இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தனி ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இ.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் தலைமையில், காவலர்கள் மற்றும் காவலர்கள் குடும்பத்தினருக்கு கொரானா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக, 18 வயது மேற்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்த முகாமில் திரு.பிரசன்னா, துணைக் காவல் கண்காணிப்பாளர், கமுதி., திரு.மோகன், ஆய்வாளர், அபிராமம் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பலர் தடுப்பூசி செலுத்தி பயனடைந்தனர்.