கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்., மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேடியப்பன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் சங்கு, விவேகானந்தன் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்