சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வீரபாண்டிபுரத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர் ஏழுமலையான் ரைஸ்மில் அருகே நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 2 நபர்கள் காவல்துறையினர் எனக்கூறி ஏமாற்றி ரூ.1500 பணத்தை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து பாண்டி 07.05.2020 அன்று அளித்த புகாரின் பேரில் போலீசார் தேவகோட்டை சேர்ந்த விஜய பிரபாகரன் மற்றும் ஆசாத்கான் ஆகிய 2 நபர்களின் மீது u/s.420, 392 IPC – கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி இராமநாதபுரம்