பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், ஊறல் & எரிச்சாராயம் ஆகியவற்றை தயார் செய்தல், விற்பனை செய்தல் மற்றும் சாராய பாட்டில் ஆகியவை விற்பனை செய்தல், கடத்தல், பதுக்கல் தொடர்பாக கடும்
நடவடிக்கை எடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் அனைத்து காவல் நிலையத்திலும் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாராய விற்பனையை தடுக்க அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.
இந்நிலையில் குன்னம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ரவீந்திரன் அவரது காவல் நிலைய காவலர்களுடன் சாராய வேட்டைக்கு புறப்பட்டு பல்வேறு கிராமங்களில் சோதனை நடத்தினார்.
அப்போது குமார் 34/21 S/0 வீரமுத்து , பூங்கா நகர், கிழுமத்தூர் பஞ்சாயத்து என்பவர் வீட்டு பாத்ரூமில் வைத்திருந்த சுமார் 500 லிட்டர் ஊரல் கண்டுபிடித்து சாராய ஊரலை அந்த இடத்திலேயே அழித்தும் பின்னர் விஜயகுமார் 34/21 S/0 சேகர் பழைய
காலணி, கீழுமத்தூர் பஞ்சாயத்து குன்னம் வட்டம் என்பவரிடம் சுமார் 200 லிட்டர் ஊரலை அந்த இடத்திலேயே அழித்தும் மேற்படி இரண்டு நபர்களையும் குன்னம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவல் ஆய்வாளர் அவர்கள் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அரும்பாவூர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும் காவல்நிலைய காவலர்களுடன் சாராய வேட்டைக்கு புறப்பட்டு கள்ளப்பட்டி கிராமத்தில் சோதனை நடத்தியதில் ராமகிருஷ்ணன் (45/21) த/பெ அழகப்பன்,
காட்டுக்கொட்டகை, கள்ளப்பட்டி என்பவரின் காட்டில் வைத்திருந்த 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து மேற்படி நபரை நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆயவாளர் திருமதி.ஜெயலெட்சுமி அவர்கள் தலைமையில் பிரிவு காவலர்களுடன் சாராய வேட்டைக்கு புறப்பட்டு சூரியகுமார் 21/21 த/பெ செல்லமுத்து திருமாந்துறை என்பவர் 53
லிட்டர் மதிப்புள்ள 354 பாக்கெட் நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்து நிலையம் அனுப்பி வைத்தும், பின்னர் மது வேட்டையை தொடர்ந்த காவல் ஆய்வாளர் நமையூர் கிராமத்தில் வசிக்கும் முத்துசாமி 37/21 த/பெ அய்யாசாமி மற்றும் பெரியசாமி 40/21 த/பெ பிச்சைபிள்ளை ஆகியோர் விற்பனைக்காக வைத்திருந்த 45 லிட்டர் மதிப்புள்ள
சுமார் 300 பாக்கெட் நாட்டு சாராயத்தை பறிமுதல் செய்து மதுவிலக்கு அமலாக்க பிரிவிற்கு வந்த காவல் ஆய்வாளர் மேற்படி 3 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் அரசால் தடை செய்யப்பட்ட சாராயத்தை யாரேனும் விற்பனை செய்வதாக தெரிந்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண் 9498100690 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இரகசியம் காக்கப்படும்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை