சென்னை : தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் டி.எஸ்.பிக்கள் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய டி.ஜி.பி திரு. செ.சைலேந்திர பாபு, உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் கோவையில் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் காவல்துறை அதிகாரிகள் மாற்றப்பட்டனர். காலியாக இருந்த கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளர் பொறுப்புக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளராக இருந்த பார்த்திபன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அவர் அப்பணியில் இருந்து தற்போது மாற்றப்பட்டுள்ளார். சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தேனி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பியாக இருந்து வரும் திரு.பிரபாகரன் – கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். கோவை மாநகர உளவுத்துறை உதவி கமிஷனர் திரு..பார்த்திபன் – கோவை மாவட்டம் சிங்காநல்லூர் சரக டிஎஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு அதிரடிப்படைD.S.P திரு..சுகுமார் – கோவை மாநகர சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையராக நியமிக்கப்பட்டார்.
தேனி மாவட்டத்தில் பயிற்சியில் இருக்கும் திரு. ராஜேஸ்வரன் – நெல்லை திரு.ஜங்சன் சரக உதவி கமினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் திரு.வினோஜி – விருதுநகர் மாவட்டம் சாத்தூர் திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி திரு.ரமேஷ் – கள்ளக்குறிச்சி சப்-டிவிஷன் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகர குற்ற ஆவண காப்பக உதவி ஆணையாளர் திரு.கென்னடி – திருச்சி கண்டோன்மெண்ட் உதவி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் திரு.பாரதிதாசன் – திருச்சி மாவட்டம் திரு.ஜீயர்புரம் சரக டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள டி.எஸ்.பி சகாயஜோஸ் – தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சரக டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆலங்குளம் சரக டிஎஸ்பி பொன்னரசு – தூத்துக்குடி மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். இவ்வாறு டி.ஜி.பி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்திகளுக்காக
சென்னையிலிருந்து
திரு.முகமது மூசா