திருநெல்வேலி: தமிழ்நாடு காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு சைபர் கிரைம் காவல் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இப்பிரிவில் பணிபுரிய கடந்த இரண்டு மாதத்திற்கு முன் விருப்ப மனு இணையவழி மூலம் அனுப்புமாறு காவல்துறையினர்கு அறிவுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட காவல் துறையினரிடம் இருந்து விருப்ப மனு பெறப்பட்டது.
மேற்படி விருப்ப மனு பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கான தேர்வு 25.09.2021 இன்று பாளையங்கோட்டை தூய.யோவான் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
இத்தேர்வு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.நெ.மணிவண்ணன இ.கா.ப அவர்கள், முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட தலைமையகம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதிவாணன், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இதில் திருநெல்வேலி மாவட்டம்,மாநகர காவல்துறையை சேர்ந்த 127 காவலர்கள் தேர்வு எழுதினார்கள்.
எழுத்து தேர்வு பாதுகாப்பு பணியில் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் திரு.ராஜ், உதவி ஆய்வாளர், திரு.ராஜரத்தினம் மற்றும் சைபர்கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டனர்.