பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் காவல் நிலையத்திற்குட்பட்ட அல்லிநகரம் கிராமத்தில் வசித்து வந்த பெரியசாமி 62/21 மற்றும் அவரது மனைவி அறிவழகி 48 ஆகியோர்கள் தனியாக வீட்டில் இருக்கும்போது.
கடந்த 08.06.2021-ம் தேதி அதிகாலை 02.30 மணியளவில் குற்றவாளிகள் 1.சந்துரு @ சந்தோஷ்குமார், 2.மகேஷ், 3 யுவராஜ் , 4.அப்பு @ ஸ்ரீராமகிருஷ்ணன் , 5.சத்யா த/பெ மணி, 6. நாட்டாத்தி @ மணிகண்டன் ஆகியோர்கள் ஒன்றாக கூடி சதி திட்டம் தீட்டி மேற்கண்ட தம்பதியினர் வீட்டில் நுழைந்து இருவரையும் இரும்பாலான ஆயுதத்தால் கொடுரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அவர்களது வீட்டிலிருந்த நகைகள், கொலுசு, டிவி மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதை தொடந்து குன்னம் காவல் நிலைய குற்ற எண் 580/21 U/s 120 (b), 449, 396 IPC r/w 34 IPC-ன் படி
வழக்கு பதிவு செய்து மேற்கண்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப மற்றும் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ராதிகா இ.கா.ப மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி ஆகியோர்களின் உத்தரவின்படி.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆரோக்கியபிரகாசம் (தலைமையிடம்), துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், திரு.சரவணன் மற்றும் திரு.மோகன்தாஸ் ஆகியோர்களின் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் திரு.ரவிந்திரன் மற்றும்
திருமதி.கலா ஆகியோர்களின் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படிகளை தீவிரமாக தேடியும் பின்னர் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து களவு சொத்துக்களான தங்க நகைகள்-16 பவுன், டிவி -1, வெள்ளி கொலுசு -1 செட் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ரூபாய் 2,62,000/- மதிப்புள்ள பொருட்களை பாதிக்கப்பட்ட நபரான திருமதி சத்தியா அவர்களிடம் இன்று 05.08.2021-ம் தேதி மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்கள் ஒப்படைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை