தூத்துக்குடி : திருநெல்வேலி சரகத்திலுள்ள மாவட்டங்களில் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் 2023 வரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பாக பணிபுரிந்த கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் திரு. C. ஆறுமுகம் அவர்கள் தலைமையிலான திருநெல்வேலி சரக சிறப்பு கஞ்சா தடுப்பு தனிப்படை காவல் ஆளினர்கள் திரு. சுபாஷ், திரு. வீரமணி, திரு. கண்ணன், திரு. ராஜேஷ், திரு. அழகுதுரை, திரு. ரமேஷ், திரு. முத்துமணி, திரு. வேம்புராஜ், திரு. முத்துராஜன் ஆகியோரை (19.04.2023) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. பிரவேஷ் குமார் இ.கா.ப அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.