திருச்சி : திருச்சி மாவட்டம், 19.06.2020 நேற்று 144 தடை உத்தரவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் ஏனைய உதவிகளை திருச்சி மாவட்ட காவல் துறையுடன் இரண்டு மாதங்கள் இணைந்து தொடர்ந்து களப் பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜியாவுல் ஹக் இ.கா.ப அவர்களின் சார்பாக தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சந்திரசேகர் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.அஜீம் அவர்களின் மூலம் IDFC பாரத் நிறுவன முதுநிலை பொது மேலாளர் திருமதி.மேரி அன்பரசி,திரு.ஜான் பால் அசோக்,திரு. சிவா,திரு. சந்திரசேகர், சந்துரு,பிரபு ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.