கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இயங்கிவரும் முத்தூட் நிறுவனத்தில் 22 .01. 2021 ஆம் தேதியன்று நடைபெற்ற கொள்ளையில் திருடுபோன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல் துறையினருக்கு குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறையினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தனது கீச்சகத்தில் (Twitter) பதிவிட்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.