திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காந்தி மார்க்கெட் சாலையில் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பழனி நகர காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் மற்றும் போக்குவரத்துக் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். போக்குவரத்திற்கு இடையூறாக இருபுறமும் உள்ள கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்ததன் பேரில் கடை உரிமையாளர்களுக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி அறிவுரை வழங்கினார். இந்த செயல் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா