தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செயின் வழிப்பறி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளை சம்பவம் நடைபெற்ற 15 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்து, 3 பவுன் தங்க செயினை மீட்ட சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் சங்கர் மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் கலைவாணர் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2004ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிக்கு 2009ம் ஆண்டு நீதிமன்றம் குற்றவாளி இல்லையென தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை முடிவில் எதிரிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்த மாசார்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அனிதா மற்றும் புதூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ரவிக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய சேரகுளம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் வேம்புராஜ், ஆனந்தராஜ், ஏரல் காவல் நிலைய காவலர் ஜான் அந்தோணி மற்றும் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர் பட்டவராயன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,
பசுவந்தனை காவல் நிலையத்தில் கடந்த 21.02.2022 முதல் 25.02.2022 வரையான காலகட்டத்தில் 76 வழக்குகளை நீதிமன்ற கோப்புக்கு எடுத்தும் மேலும் 23 வழக்குகளின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த பசுவந்தனை காவல் நிலைய காவலர் சுடலைமணி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,2 காவல் ஆய்வாளர்கள் உட்பட 10 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் ஷாமளாதேவி மற்றும் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.
Kumar and 34 others
1 share
Like
Comment
Share