திருநெல்வேலி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து அமலில் இருந்து வருகிறது. இதில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் காவல்துறையினர், கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையின் பயன்பாட்டிற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் காவல்துறையினருக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
இதனடிப்படையில் இன்று ஆனமலை டொயோட்டோ நிறுவன மேலாளர் திரு.மகேஷ், அவர்கள் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு மணிவண்ணன் இ.கா.ப அவர்களை நேரில் சந்தித்து மாஸ்க் மற்றும் சானிடைசர் வழங்கினார்கள்.
பின் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொரோனா வைரஸ் தொடர்பான பாதுகாப்பு பணிகள் மற்றும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர்க்கு அவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளார்.