கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2006 ஆம் ஆண்டு பதிவான குற்ற வழக்கின் குற்றவாளியான கபீர்@ மணிசாகுல் @ அபு குரைராn 42 என்பவர் கடந்த 2007ம் ஆண்டு முதல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு முறையாக ஆஜராகாமல் ஒவ்வொரு முறையும் தனது பெயரை மாற்றி கூறி வந்துள்ளார். இந்நிலையில் மேற்படி குற்றவாளியை விரைந்து கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டதின் பேரில் காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேற்படி குற்றவாளி கடந்த 2007 ஆம் ஆண்டு தென்காசியில் நடைபெற்ற (6 murder) வழக்கின் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. குற்றவாளியை கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ஷாஜஹான், தலைமை காவலர்கள் திரு. இதயத்துல்லா மற்றும் திரு.பன்னீர் செல்வம் ஆகியோருக்கு தென்மண்டல காவல்துறை தலைவர் திரு Dr.N. கண்ணன் IPS., அவர்கள் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்..