சேலம் : சேலம் மாநகர போலீசாருக்கான ஒருநாள் தடய அறிவியல் பயிற்சி வகுப்பு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. துணை கமிஷனர் திரு. மாடசாமி, முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் பாரி கலந்து கொண்டு போலீசாருக்கு பயிற்சி அளித்தார். அப்போது குற்றங்கள் நடைபெறும் போது தடயங்களை சேகரிப்பது, சேகரிக்கப்பட்ட தடயங்களை எவ்வாறு கையாள்வது, அதனை வைத்து எவ்வாறு குற்றவாளிகளை அடையாளம் காண்பது போன்றவை குறித்து விளக்கி கூறப்பட்டன. இதில் சேலம் மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உட்பட்ட துணை கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சேலம் மாநகர தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் வடிவேல் மற்றும் அலுவலக ஊழியர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.