திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.பார்த்திபன் தலைமையில், காவல்துறையினர் ஆரணி பஸ் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது காவல் துறையினரால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய செல்போன் செயலி (ஃபேஸ் ஐடெண்டிஃபிகேஷன் ஆப் – FACETAGR) மூலம் வாகன ஓட்டிகளை படம் பிடித்தனர். அப் போது ஒருவரை படம் பிடித்தபோது, அவர் திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தை சேர்ந்த பலராமன் (25) என்பதும், இவர் மீது திருநின்றவூர், முத்தியால்பேட்டை, செவ்வாய்ப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில், வழிப்பறி வழக்குகளில், தேடப்பட்ட குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
எனவே காவல்துறையினர் அவரை கைது செய்து, பொன்னேரி கோட்டாட்சியர் வித்யா முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். ஃபேஸ் ஐடெண்டிஃபிகேஷன் மூலம் பழைய குற்றவாளியை போலீசார் கண்டுபிடித்து கைது செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன்,IPS, அவர்கள் உருவாக்கிய செயலியான மூலம் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுபள்ளது பொதுமக்களின் பாராட்டை பெற்றுள்ளது.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்