திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர். தற்போது தேர்தல் முடிந்தும் அரசும் அமைக்கப்பட்டது. ஆனால் தேர்தல் பணிக்காக இடம் மாற்றம் செய்யப்பட்ட ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட வில்லை. இதனால் காவல்துறையினர் தங்கள் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரை பார்க்க முடியாமலும் குடும்பத்தை கவனித்துக் கொள்ள குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்க முடியாமலும் திணறுகின்றனர்.
உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிட்டு முழு ஈடுபாட்டோடு பணியை செய்ய முடியவில்லை.மேலும் தற்போது பள்ளி கல்வி ஆண்டு தொடங்குவதால் குழந்தைகளை இடமாற்றம் செய்வதா?
அல்லது இடமாற்றம் செய்த பின்பு தங்களுக்கு பணிமாறுதல் வந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் உள்ளனர். பள்ளிகளில் குழந்தைகளின் இடமாறுதல் சான்றிதழ் வாங்குவதா ? வேண்டாமா ?என்ற மன உளைச்சலிலும் காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இருக்கின்றனர். எனவே திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா