சேலம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த ஷாலினி என்ற 8 மாத கர்ப்பிணி பெண் நோய்வாய்பட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு செல்ல இயலாமல் தவிப்பதை அறிந்த சேலம் நகர காவல் ஆய்வாளர் திரு.குமார் மற்றும் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில், இருந்த காவலர்கள் உடனடியாக அப்பெண்ணிற்கு, வாகன ஏற்பாடு செய்து வழியனுப்பி வைத்தனர். போலீசாரின் மனிதாபிமானமிக்க இச்செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி சென்றனர்.