சிவகங்கை : தேவகோட்டை நகரில் கஞ்சா குட்கா, ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் பற்றி விசாரணை செய்ததில் இடையன் வயலை சேர்ந்த செந்தில் என்பவர் ஆர்.எஸ் மங்கலத்தில் உள்ள சையது இம்ரான் கான் என்பவரிடமிருந்து வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செந்தில்குமார்,அவர்கள் உத்தரவுப்படியும் தேவகோட்டை உட்கோட்டை காவல் துணைகண்காணிப்பாளர் திரு.கணேஷ்குமார் அவர்கள் மேற்பார்வையில் தேவகோட்டை நகர காவல் ஆய்வாளர் திரு.சரவணன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு.ராமச்சந்திரன், திரு.சண்முகவேல், மற்றும் காவலர்களுடன் தனிப்படையினர் ஆர்.எஸ் மங்கலம், சென்று விசாரணை செய்ததில் தர்மர் கோவில் தெருவில் உள்ள சையது இம்ரான் கான் என்பவருக்கு சொந்தமான குடோனில் மேலும் புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
அங்கு சென்று பதிக்கி வைத்திருந்த புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக ஆட்டோவில் ஏற்றிக் கொண்டிருந்த சையது இம்ரான் கான் அவருக்கு உடந்தையாக இருந்த வாசு ஆட்டோ ஓட்டுனர் கார்த்திகேயன், ராசு மற்றும் தேவகோட்டையில் புகையிலைப் பொருட்களை வாங்கி விற்பனை செய்த செந்தில், முருகன் ஆகியரையும் போலீசார் கைது செய்து சுமார் 400 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருட்களையும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி