இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக்.IPS., அவர்கள் உத்தரவின் பேரில் இராமேஸ்வரம் உட்கோட்டத்தில் தொடர்ச்சியாக நடைபெற்ற கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ்.IPS., அவர்கள் தலைமையில் இராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கொலை வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி விரைந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ் வழங்கிய உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.தீபக் சிவாஜ்.IPS., அவர்கள், கொலை வழக்குகளில் குற்றவாளிகளை அடையாளம் காண C.C.TV கேமிராக்கள் பெரிதும் உதவியதாக இருந்தது என கூறினார்கள்.
மேலும், இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் மற்றும் கடைகளில் C.C.TV கேமிராக்கள் பொருத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.