அரியலூர் : அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் இயங்கிவரும் முந்திரிப்பருப்பு பிரித்தெடுக்கும் ஆலையில் பணிபுரியும் பெண்களுக்கு
05.10.2020. அன்று திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் Z.ஆனி விஜயா இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.R. ஸ்ரீனிவாசன் அவர்களின் மேற்பார்வையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் உதவிஆய்வாளர் செல்வி.சற்குணம் மற்றும் தலைமை காவலர் திருமதி.சுமதி ஆகியோர் இணைந்து ”கேடயம் (SHIELD)” திட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் கேடயம் (SHIELD) திட்டம் தொடர்பாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க திருச்சி சரக காவல்துறையின் கேடயம்(SHIELD) திட்டத்தின் உதவி எண்கள் 6383071800, 9384501999 பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்கள்.