அரியலூர் : திருச்சி சரக காவல் துணை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படி, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், அரியலூர் மாவட்ட காவல் துறையின் சார்பாக காவலர்களின் குழந்தைகள் ஒருங்கிணைக்கப்பட்டு குழந்தைகள் குழு ஆரம்பிகக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் 02.06.2020 ACTU காவல் ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள் தலைமையில் குழந்தைகளுக்கு பாரம்பரிய விளையாட்டுகள் கற்று கொடுக்கப்பட்டு, குழந்தைகளுக்கு இடையே போட்டிகள் நடைபெற்றன. இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற குழந்தை செல்வங்களுக்கு ஆய்வாளர் திருமதி.சுமதி அவர்கள் பரிசுகள் வழங்கினார்.