தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை போலீசாரின் உடற்பயிற்சி இன்று (09.03.2024) காலை தூத்துக்குடி வட பாகம் காவல் நிலைய வளாக மைதானத்தில் நடைபெற்றது. மேற்படி போலீசாரின் உடற்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய முக்கிய பணிகள் குறித்து தகுந்த அறிவுரைகள் வழங்கினார். பின்னர் போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதற்கு நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. பழனிச்சாமி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. வெள்ளதுரை, திரு. பெருமாள், திருமதி. பரமேஸ்வரி உட்பட ஆயுதப்படை போலீசார் உடனிருந்தனர்.