மதுரை : மதுரை வழக்கறிஞர் திரு. முத்துக்குமார், தலைமையில் வழக்கறிஞர்கள், ராஜேந்திரன், நீலமேகம், கௌரிசங்கர், அமிழ்தன், நாகராஜ் பாண்டிவேல்ராஜன், முகமது ரஸ்வி ராஜு, ஆகியோர் மதுரை காவல் ஆணையர் திரு .செந்தில்குமார், அவர்களை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் மதுரை ஆதினமடம், 293 ஆண்டுகாலம் பாரம் பாரியம் மிக்கது. ”திருஞான சம்பந்தரால் தோற்று விக்கப் பட்டது”, சமீபத்தில் அவரது உயிருக்கும் ஆதின மடத்திற்கும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்து விரோத சக்திகள், எந்த நேரமும் மதுரை ஆதினகர்த்தார் மீதும், மடத்தின் மீதும், தாக்குதல் நடத்துவதற்கு, வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் மத மோதல்கள், ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இது சம்பந்தமாக இன்று காலையில் ஆதினம், அவர்களை நேரில் சந்தித்து நிலவரம் அறிந்தோம்.
அவரும் உரிய பாதுகாப்பு கேட்டு, பேட்டி அளித்துள்ளார். ஆகவே மதுரை ஆதினத்திற்கும், ஆதின மடத்திற்கும் , ஆயுதம் தாங்கிய காவல்துறை, பாதுகாப்பு அளித்து பல்லாயிரம் ஆண்டுகள், பாரம்பரியம் மிக்க இந்து மதத்தை பாதுகாக்க, பொதுநலன் கருதி கேட்டு கொள்கிறேன். என்று தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் உறுதி அளித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி