சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்¸ பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட “CLApp” எனும் விடுப்பு செயலியை வெளியிட்டார்.
இந்த செயலியை காவல்துறையினர் தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து¸ இருக்கும் இடத்தில் இருந்தபடியே விடுப்பு கோரி விண்ணப்பிக்கலாம். இவ்விழாவில் கூடுதல் தலைமை செயலாளர் அவர்கள்¸ காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர், முனைவர் திரு.செ.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள்¸ சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உடனிருந்தனர்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்