வேலூர்: வேலூர் மாவட்டத்தில், மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவர் மயில்வாகணன் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் முன்னிலையில் (22.11.2024)-ம் தேதி மதுவிலக்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மதுவிலக்கை கட்டுப்படுத்த தேவையான நடைமுறைகள் பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து (23.11.2024)-ம் தேதி மதுவிலக்கு மற்றும் அமலாக்கப்பிரிவு காவல்துறைத் தலைவர் அல்லேரி, பீஞ்சமந்தை போன்ற மலை கிராமங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் தமிழக ஆந்திர எல்லைச் சோதனைச் சாவடியான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடிக்கு சென்று அங்கு பணியிலிருந்த காவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. ராபர்ட் கென்னடி