தருமபுரி : கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.சரவணசுந்தர்,இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரிலும், சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. சந்தோஷ் ஹதிமணி,இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலின் பேரிலும் தருமபுரி மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குற்றச் செயல்களை தடுப்பதற்குமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, Mobile Data Terminal (MDT) Device, ஒலிப்பெருக்கி, வாக்கி டாக்கி மற்றும் Siran பொருத்தப்பட்ட 9 இருசக்கர ரோந்து வாகனங்கள் தருமபுரி மாவட்ட காவல்துறையின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது. இந்நிகழ்வு தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S.மகேஸ்வரன் B.Com, BL., அவர்களால் இன்று (23.01.2026) தக்க அறிவுரை வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
மேலும், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.N.பாலசுப்பிரமணியன் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) திரு.K.ஸ்ரீதரன் ஆகியோரகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட இருசக்கர ரோந்து வாகனங்கள், Dedicated Beat ரோந்து பணிக்காக பயன்படுத்தப்படவுள்ளன. இவ்வாகனங்களில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பள்ளி, கல்லூரி மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வார்கள். மேலும், அவசர உதவி எண் 100 மூலம் பெறப்படும் அவசர அழைப்புகள் தொடர்பான புகார்களுக்கு, (Dedicated Beat) அர்பணிப்பு ரோந்து காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள். வரும் காலங்களில் (Dedicated Beat) அர்பணிப்பு ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்து பணிகளை விரிவுபடுத்தப்படும்.
















