திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பகுதியில் பக்தர்கள் வசதியை மேம்படுத்தும் விதமாக அய்யம்புள்ளி ரோடு, சன்னதி ரோடு, பாலாஜி ரவுண்டானா ஆகிய பகுதிகளில், பழனி நகர் துணை கண்காணிப்பாளன் உத்தரவின் பெயரில் காவல்துறையினர் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது, மற்றும் பொதுமக்கள் , பக்தர்கள் அவர்களது வாகனங்களை முறையாக நிறுத்த அறிவுறுத்துவது போன்ற பணிகளை மேற்கொண்டனர். இதனால் இங்கு நீண்ட காலமாக வரும் பக்தர்கள் வாகன நெரிசலும் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்பொழுது கோவிலுக்கு நாங்கள் எந்த நெரிசலும் இல்லாமலும் வேகமாக சென்று வருகிறோம் என்று பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இது சம்பந்தப்பட்ட காவல்துறைக்கும் கோவில் நிர்வாகத்திற்கும் நகராட்சிக்கும் சமூக வலைத்தளங்களில் நன்றிகளை தெரிவித்தனர்.