திண்டுக்கல்: திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர்திரு.M.S.முத்துச்சாமி,இ.கா.ப., அவர்கள் மற்றும் தேனி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சாய்சரண் தேஜஸ்வி,இ.கா.ப., அவர்கள் மற்றும் நேதாஜி அறக்கட்டளை சார்பாக குமுளி காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பளியங்குடி மலைகிராம பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு
அங்குள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள் வழங்கியும், அங்குள்ள குழந்தைச் செல்வங்களுக்கும், பொதுமக்களுக்கும் மதிய உணவு அளித்து நோய் தொற்றிலிருந்து தங்களையும் தங்கள் குடும்பத்தையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற முன்னெச்சரிக்கை பாதுகாப்பு
நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகளை எடுத்துக் கூறி இலவச முகக் கவசங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
மேலும் அத்தியாவசிய உதவிகளை பெற்றுக்கொண்ட மலை கிராம பொதுமக்கள் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்களுக்கும்,தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.