சென்னை: திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த பாபு, (வ/47) என்பவர் ஐஸ்ஹவுஸ், நடேசன் ரோடு அருகில் உள்ள தீர்த்தபாலீஸ்வரர் கோவிலில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். பாபு 17.06.2021 அன்று அதிகாலை கோவிலில் இருந்தபோது அடையாளம் தெரியாத 4 நபர்கள் கோயில் உண்டியலை உடைக்க முயற்சி செய்துள்ளனர்.
பாபு அவர்களை தடுத்தபோது, மேற்படி 4 நபர்களும் இரும்பு ராடால் தாக்கிவிட்டு அவர் வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாபு D3 ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
D3 ஐஸ்ஹவுஸ் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து, மேற்படி காவலாளி பாபுவை இரும்புராடால் தாக்கிய நான்கு இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் மேற்படி கோவிலில் உள்ள உண்டியலை உடைத்து, பணத்தை திருட முற்பட்டபோது,
காவலாளி தடுத்து கூச்சலிட்டதால் காவலாளியை தாக்கி அவரிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் இளஞ்சிறார்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் 2 அடி நீளமுள்ள இரும்புகம்பி கைப்பற்றப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், நான்கு இளஞ்சிறார்களும் சிறார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.