வேலூர்: கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, வேலூர் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் உள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள்,
வேலூர் மாவட்ட இணையதள குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. K.S .சுந்தரமூர்த்தி அவர்கள், மதுவிலக்கு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. ரவிச்சந்திரன் அவர்கள்,
வேலூர் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. V. மணிமாறன் அவர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீர மரணங்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
துப்பாக்கி குண்டுகள் முழங்க..
நிகழ்ச்சியின் நிறைவில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செல்வகுமார் அவர்கள், பேசும்போது, இந்திய நாட்டில் கடந்த ஆண்டு தேசத்திற்காக பணியின்போது தன் இன்னுயிரை நீத்த 264 காவலர்களுக்கு
வீரவணக்கம் செலுத்தும் விதமாக துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைவரும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். வீர வணக்க நாளை முன்னிட்டு போலீஸார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இராணிப்பேட்டை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்