மதுரை : கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி லடாக் பகுதியில் ‘ஹாட் ஸ்பிரிங்ஸ்’ என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்பட்டுவருகிறது.
அதன்படி, மதுரை மாநகர் ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை நாடு முழுவதும் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS., தென்மண்டல காவல்துறை தலைவர் திரு. முருகன் IPS., மதுரை சரக காவல்துறை துணை தலைவர் திரு. ராஜேந்திரன் IPS, அவர்கள் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சிவபிரசாத் IPS., மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுஜித்குமார் IPS., தளவாய் ம்கள்தளவாய் துணை ஆணையர் (குற்றம்) திரு.பழனிக்குமார் அவர்கள், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு.சுகுமார் அவர்கள், காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு. பாஸ்கரன் அவர்கள், காவல் துணை ஆணையர் ஆயுதப்படை திரு. சோமசுந்தரம் அவர்கள், மதுரை 6 அணி சிறப்பு காவல் படை தளவாய் திரு.இளங்கோ அவர்கள் மற்றும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் வீர மரணங்களை நினைவு கூறும் வகையில் மலர் வளையம் வைத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.சேவியர்
மதுரை மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
மதுரை.