சென்னை : காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதன்பேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் ‘காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரமாக” கடைபிடிக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக இன்று (27.10.2021) காலை, அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல போக்குவரத்து காவல் துறையினரின் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இகாய, அவர்கள் துவக்கிவைத்தார்.
பின்னர் கொரோனா பேரிடர் காலத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுத்து, பொதுமக்களை பாதுகாக்கும் பணிய பணியில் ஈடுபட்டு இறந்து போன போக்குவரத்து காவல் ஆளிநர்களின் படத்திற்கு மரியாதை மலர்தூவி அஞ்சலி செலுத்தி அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதுல் கூறினார். தொடர்ந்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநிர்கள் அஞ்சலி செலுத்தினர்.
திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஏழுமலை