தேனி: லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதனையடுத்து இன்று தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.K.V.முரளிதரன்,இ.ஆ.ப., அவர்கள்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்கள், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், காவல் அதிகாரிகள், வீர மரணம் அடைந்த காவலர்களின் குடும்பத்தார்கள் முன்னிலையில் பாதுகாப்பு பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் மலர்வளையம் வைத்து 66 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.