தென்காசி : தென்காசி மாவட்டத்தில் காவலர் வீரவணக்க நாள்1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
ஆய்க்குடி காவல் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நீத்தார் நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு பணியின்போது இன்னுயிர் நீத்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.T.P.சுரேஷ்குமார் அவர்களின், தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள்,சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து, 60 துப்பாக்கி குண்டுகள் முழங்க பணியின் போது தனது இன்னுயிர் நீத்த தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.சுந்தரையா உட்பட மத்திய பாதுகாப்பு படை மற்றும் மாநில காவல் துறையில் பணியாற்றிய 188 காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.