மதுரை : “காவலர் நீத்தார் நினைவு நாள்” ஒவ்வொரு ஆண்டும் அக்டடோபர்-21ம் தேதி நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினத்தை முன்னிட்டு இன்று (20. 10.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் 5 கிலோமீட்டர் ஓட்டத்தை மதுரை மாநகர் தமுக்கம் மைதானத்திலிருந்து காலை 06.00 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஓட்டம், கோரிப்பாளையம், பனகல் சாலை, ஆவின் சந்திப்பு, கே.கே நகர் பிரதான சாலை, அண்ணாநகர் காவல் நிலையம் வழியாக, கே.கே நகர் வளைவு, மதுரை மாவட்ட நீதிமன்றம் வழியாக, ரேஸ் கோர்ஸ் சாலை, அழகர் கோயில் சாலை, தல்லாகுளம் பெருமாள் கோயில் வழியாக தமுக்கம் மைதானத்தில் முடிவடைந்தது.
வெற்றி பெற்ற கீழ்க்கண்ட நபர்களுக்கு காவல் ஆணையர் அவர்கள் ரொக்கப்பரிசும், சான்றிதழ்களும், பதக்கமும் வழங்கி தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.
ஆண்கள்:
1.சந்தோஸ் குமார்
2.வினோத்குமார்
3.பட்டாணி
4.கண்ணன்
5.வரதராஜன்
6.லாரன்ஸ்
7.வள்ளியப்பன்
8.சந்தோஷ்
பெண்கள்:
1.நீலாம்பரி
2.காளீஸ்வரி
3.ரம்ஜான்பேகம்
4.கார்த்திகா
5.சினேகா
6.முத்துலட்சுமி
7.சிவகாமி
8.பிரீத்தி
குழந்தை:
துர்காதேவிக்கு சிறப்பு பரிசு
இந்நிகழ்ச்சியில் தென்மண்டல காவல்துறை துணை தலைவர் திருமதி. ஆனிவிஜயா இ.கா.ப., மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சட்டம் மற்றும் ஒழுங்கு திரு.சசிமோகன் இ.கா.ப., காவல் துணை ஆணையர் தலைமையிடம் திரு.மகேஷ் இ.கா.ப., காவல் துணை ஆணையர் குற்றம் முனைவர்.திரு.செந்தில் குமார், காவல் துணை ஆணையர் போக்குவரத்து திரு. சுகுமார் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் இ.கா.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை