திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் இன்று 21.10.2020. ஆம் தேதி காலை 08.00 மணி அளவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தியாகி நினைவிடத்தில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு காவல் பணியின் போது பல்வேறு சூழ்நிலைகளில் தன் இன்னுயிரை ஈந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் கவாத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு சூழ்நிலைகளில் பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.