திண்டுக்கல் : காவல் துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் முன்னிலையில் 63 குண்டுகள் முழங்க மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21- ஆம் தேதி காவலர் வீரவணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இன்று காவல்துறையில் வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவுகூறும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.M.S முத்துசாமி, இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா, இ்.கா.ப அவர்கள் வீரமரணமடைந்த காவலர்களுக்கு, 63 குண்டுகள் முழங்க, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வீரமரணமடைந்த காவலர்களுக்கு தங்கள் மரியாதையை செலுத்தினார்கள். மேலும் வீரமரணமடைந்த காவலர்கள் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா