தர்மபுரி : தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தலைமையேற்று உரையாற்றிய தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கலைச்செல்வன் IPS அவர்கள் உரையாற்றும்போது, 1959ம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் காவலர்கள்(CRPF) உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, பதினாறாயிரம் அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூர்கிறோம்.
கடற்கரையானாலும் பணிமலைச் சிகரமானாலும் காவலர் பணி இடர் நிறைந்தது. Lord Tennyson -ன் வார்த்தைகளில் சொல்லப் போனால்
Theirs not to reason why Theirs not to make reply
Theirs but to do and die
உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப் பிரிந்த காவல் குடும்பத்தினரின் எண்ணிக்கை 377. மடிந்த இவர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு. அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்போம் என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அண்ணாமலை, புஷ்பராஜ், குணசேகரன், டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, சௌந்தரராஜன், கருணாகரன், தர்மபுரி இன்ஸ்பெக்டர் சரவணன், தர்மபுரி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி, தர்மபுரி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக உதவி ஆய்வாளர் சுந்தரம் மற்றும் பல காவலர்கள் கலந்து கொண்டனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.