காஞ்சி: காவலர் வீரவணக்க நாள் 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக் பகுதியில் Hot Spring என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மததிய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.
கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரமரணம் அடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ம் நாள் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு மட்டும் நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் 377 காவலர்கள் உயிர்தியாகம் செய்துள்ளனர். இவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் இன்று (21.10.2021) காஞ்சிபுரம் ஆயுதப்படை மைதானத்தில் 63 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.M.சத்யபிரியா, இ.கா.ப., காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.Dr.M.சுதாகர், காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர்கள் பங்கேற்றனர்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்