வேலூர் : காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூட கருதாமல், உயிர் தியாகம் செய்த காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்கும் நாள் அக்டோபர் 21 – காவலர் வீரவணக்கம் நாள். அக்டோபர் 21 முதல் 31 வரை வீரவணக்க வார விழாவாக காவல்துறையினரால் அனுசரிக்கப்படுகின்றது. உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவை போற்றும் வகையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று பணியில் இறந்து போன காவலர்கள் நினைவை போற்றும் வகையில் காவலர் வீர வணக்க நாளை அனுசரிக்கும் பொருட்டு, வேலூர் காவல் துறையினர் பேண்டு இசை குழுவின், இசை நாதத்தோடு சிறப்பான முறையில் கொண்டாடபட்டது.
இந்நிகழ்ச்சி காவல் ஆய்வாளர் திரு. இலக்குவன் தலைமையில், உதவி ஆய்வாளர் மணிகண்டன், முதல் நிலை காவலர்கள் பார்த்திபன், கல்பனா, நூரி பேகம், காவலர் பிரபு, மணி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பணியில் உயிர் நீத்த காவலர்களின் தியாகத்தை பாடல்கள் வாயிலாக எடுத்து உரைத்தனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்