திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலையத்தில் உள்ள காவலர்கள் அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் நத்தம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜமுரளி அவர்களின் வழிகாட்டுதலின் படி பாண்டியன் சார்பு ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில் காவலர்கள் அனைவருக்கும் தன்னார்வ இளைஞர்கள் தென்னை மரக்கன்றுகளை வழங்கினார்கள்.
மேலும் திண்டுக்கல் நகரம் முழுவதும் தேவைப்படுவோர் அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.. இக்காலத்தில் இது போன்ற செயலில் அதிகம் ஈடுபடுவதால் பொதுமக்கள் பலரும் இவர்களை பாராட்டி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா