திருவாரூர்: திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நலன் கருதி மாவட்ட காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை* இணைந்து மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (02.07.21) கொரோனா விழிப்புணர்வு,
முதலுதவி, மற்றும் அடிப்படை மருத்துவ பரிசோதனை ஆகியவை நடைபெற்றது. மருத்துவ முகாமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் துவங்கி வைத்து உடல்நலம்,மனபலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை குறித்து
காவலர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்கள் மேலும் இதில் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் சுமார் 82-பேர் பங்குபெற்று பயன்பெற்றனர்.