தென்காசி : தென்காசி மாவட்டத்தில், பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக காவலர் பல்வேறு அங்காடி கடந்த (15.09.2022), தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திர பாபு I.P.S, அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து (20/09/2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS, அவர்கள் பல்பொருள் அங்காடியில் அமைந்துள்ள பொருட்கள், காவலர்கள் பெற்றுக் கொள்ளும் முறை, அதன் விலைப்பட்டியல் மற்றும் பொருட்களை வாங்க வருபவர்கள் நேரத்தை வீணடிக்காமல் குறைவான நேரத்தில் எளிதாக வாங்கும் விதமாக நடைமுறையை ஏற்படுத்துவது போன்ற செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் திரு. மார்ட்டின், ஆகியோர் உடன் இருந்தனர்.