தூத்துக்குடி : தூத்துக்குடி தருவை மைதானத்தில் தமிழ்நாடு ரயில்வே டி.ஐ.ஜி திரு. பி. விஜயகுமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் பதவிகளுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2022ம் ஆண்டிற்கான காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை இரண்டாம் நிலைக் காவலர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு கடந்த (27.11.2022) அன்று நடந்தது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியான விண்ணப்பதாரர்கள் 400 பேருக்கு உடல் தகுதி தேர்வு (06.02.2023) தமிழ்நாடு ரயில்வே டி.ஐ.ஜி திரு. பி. விஜயகுமார் இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆகியோர் தலைமையில் தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து நாளை (07.02.2023) 350 விண்ணப்பதாரர்களும், 08.02.2023 அன்று 181 விண்ணப்பதாரர்களும் ஆக மொத்தம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 931 விண்ணப்பதாரர்கள் உடல் தகுதி தேர்வில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த உடற்தகுதி தேர்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் தலைமையில் தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் அவர்கள் மேற்பார்வையில் 5 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 11 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உட்பட போலீசார் மற்றும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் இந்த உடற்தகுதி தேர்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.