திருவாரூர் : தமிழக காவல்துறை சார்பில் கடந்த 23.09.2019 முதல் 28.09.2019 வரை மாநில அளவிலான காவல்துறை திறனாய்வு போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் சரகம் சார்பில் திறனாய்வு போட்டியில் பங்கு பெற்ற திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தலைமை காவலர் 1371 திரு. செல்வகுமார் என்பவர் சிறப்பாக செயல்பட்டு கணிணி எழுத்து பிரிவில் முதலிடம் பெற்று தங்கபதக்கமும், கணிணி செயல் பிரிவில் மூன்றாம் இடமும் பெற்று வெண்கல பதக்கமும் வென்று திருவாரூர் மாவட்ட காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளார். மேற்படி தலைமை காவலரை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. M. துரை, IPS அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.