திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்டா கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனமும், நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் Dr. அகர்வால் கண் மருத்துவமனையும் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மின்டா கார்ப்பரேஷன் நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதை செம்மையாக திரு.M. அலெக்ஸ் பாண்டியன், Deputy HR/ IR, (மனித வளமேம்பாட்டு துறை) Minda Corporation அவர்கள் தலைமை வகித்து, நல்லமுறையில் ஒழுங்குபடுத்தி சிறப்பித்தார்.
இவர் தன்னை மனிதவள மேம்பாட்டு துறைக்காக முழுமையாக ஈடுபடுத்தி உள்ளார். அதன் காரணமாகவே அங்கு வேலை செய்யும் ஊழியர்களுடைய, ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில், இந்த முகாமை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியாவுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்.
திரு அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் நேர்மையுடனும், உண்மையுடனும், திறம்பட இந்நிறுவனத்தில் செயலாற்றி வருகிறார். அதன்காரணமாக அங்கு வேலை செய்யும் ஊழியர்கள், இவருடைய திறமை மற்றும் நன்னடத்தையை குறித்து பாராட்டி வருகிறார்கள்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமை திரு அலெக்ஸ் பாண்டியன் உடன், திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. ரமீசா அவர்கள், முன்னிலை வகித்து, சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். மின்டா கார்ப்பரேஷன் தரத்திற்கும், சேவைக்கும் பெயர் பெற்ற, நிறுவனமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது.
அப்பகுதியில் வாழும் ஏழை, எளிய மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு பெரும் அளவில் அளித்து வருகிறது. இதனால் அவர்களுடைய வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும் மின்டா கார்ப்பரேஷன், காவல்துறை நண்பர்களாகவே இயங்கி வருகின்றார்கள். அதில் வேலை செய்யும் ஒவ்வொரு ஊழியர்களும் சட்டம்-ஒழுங்கை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் காவலர்கள் தினத்தை நினைவு கூர்ந்தது வரவேற்கத்தக்கது. இவர்களுடைய சமுதாய சேவை,(CSR) நம்மை பெருமை கொள்ள செய்கிறது. மின்டா நிறுவனத்தில் வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான ஊழியர்கள், இந்த இலவச கண் சிகிச்சை நிகழ்ச்சியில், பங்குகொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் சுமார் இருநூறு பேர் பங்குபெற்று பயன் அடைந்து உள்ளார்கள்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண்புரை, கண் நீர் அழுத்த நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து கருவிழியில் புண், கண் நோய் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றின் மூலம் சிலருக்கு இலவச அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், பங்கேற்றவர்களுக்கு இலவச சொட்டு மருந்துகளும் வழங்கப்பட்டது.
டாக்டர். அகர்வால் கண் மருத்துவமனை 1957 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து காவலன் SOS குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பெண்களின் பாதுகாப்பிற்காக அங்கு உள்ள அனைத்து பெண் ஊழியர்களின் ஆன்ராய்டு போனில் காவலன் SOS செயலி பதிவிறக்கம் செய்வது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரு. அலெக்ஸ் பாண்டியன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட மகளிர் அணி தலைவி திருமதி. ரமீசா அவர்கள், இருவரும் பெண்கள் பாதுகாப்புக்காக உழைத்து வருகின்றார்கள்.
இது போன்ற இன்னும் பல நிகழ்வுகள் நடக்க நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சார்பாக வாழ்த்துகின்றோம்.