இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் கேணிக்கரை காவல் நிலையத்தில், போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் குடியுரிமை நிருபர்கள் சார்பில் காவலர்கள் தின விழா(24.12.2019) கொண்டாடப்பட்டது. இரவு பகல் பாராமல் உயிரை பணயம் வைத்து காவல் பணியாற்றும் உண்மையான நேர்மையான நேசமிகுந்த காவலர்களை வாழ்த்திப் பாராட்ட ஆண்டு தோறும் டிசம்பர் 24 ஆம் தேதி காவலர்கள் தினமாக அனுசரிக்கப்படுகின்றது.
காவலர் தினத்தை முன்னிட்டு போலீஸ் நியூஸ் பிளஸ் மின் இதழ் சார்பாக, நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவர் மற்றும் காவலர் தின நிறுவனருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, இராமநாதபுரம் கேணிக்கரை காவல்நிலையத்தில், மரம் நடுதல் விழா, காவல்நிலைய எழுத்தாளர் தலைமை காவலர் திரு.கர்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.செல்வம், நியூஸ்மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா, இராமநாதபுரம் மாவட்ட குடியுரிமை நிருபர்கள் பிரிவு அமைப்பு செயலாளரும், காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு முனியசாமி மற்றும் உறுப்பினர்கள் ராஜா, வினோத்கண்னண் மற்றும் மருதுபாண்டி கலந்துகொண்டனர்.
டிசம்பர் 24 காவலர்கள் தினத்தன்று நிர்வாகிகள் பலர் நேரில் சென்று அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் காவலர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை,காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் காளிதாஸ், கோவிந்தன், சார்லஸ் அவர்களை சந்தித்து காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இராமநாதபுரம் சு.சதீஷ் வனச்சரக அலுவலர் மற்றும் திரு.கணேசலிங்கம் உதவி வனப்பாதுகாவலர் அவர்களுக்கும் காவலர் தின வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்