சென்னை: பிரிட்டிஷ் ஆட்சியின் போது விக்டோரியா மகாராணிக்காக கட்டப்பட்ட அரண்மனை, தற்போது தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் காண அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சார்பு நிறுவனங்கள் பள்ளியில், பார்வை குறைபாடுள்ளவர்கள் தங்கி பயிலும் பள்ளியாக உள்ளது. இப்பள்ளி சென்னையின் சிறந்த பார்வையற்றோருக்கான பள்ளிகளில் முதல் பத்து இடத்திற்குள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு சுமார் 270 பேர், ஏழ்மையால் தங்கி பயில்கின்றனர். மேலும் இவ்விடுதியில் ஆதரவற்ற நிலையில் உள்ள, பார்வையற்ற பெரியவர்கள் மற்றும் முதியோர்கள் பலரும் உள்ளனர்.
காவலர் தினம் வருகின்ற 24 ஆம் தேதி வருவதையடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இன்று பூந்தமல்லியில் உள்ள, அரசு பார்வையற்றோர் பள்ளியில் பயிலும் சுமார் 270 மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவாக அசைவ பிரியாணி உணவுடன், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.
இவ்விழாவிற்கு அம்பத்தூர் காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளிக்கு வந்து, உணவு வழங்குவதை மேற்பார்வையிட்டார். அப்போது அவர்கள் பயிலும் வகுப்பறைக்கு சென்று, அவர்களின் கற்றல் முறையை பார்வையிட்டு அவர்களை உற்சாகப்படுத்தினார். கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து, போராட்டங்களும், ஆர்பாட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கும் போது, அதனை கட்டுக்குள் கொண்டு வரும் சிரமமான பணிகளுக்கு மத்தியில், உலக நடப்புகள் எதையும் பார்க்க முடியதாத ஏழ்மையில் உள்ள பார்வையற்றவர்களை காண நேரம் ஒதுக்கி, காவல் துணை ஆணையர் திரு.ஈஸ்வரன் வந்து, அவர்களை உற்சாகப்படுத்தியது, பாராட்டுதலுக்குரியது. இந்நிகழ்ச்சியில் SRMC காவல் உதவி ஆணையர் திரு.செம்பேடு பாபு மற்றும் காவல் ஆய்வாளர் திரு.N.கிரி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியருமான திரு.அ.சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்ட பத்திரிகை செயலாளரும் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபருமான திரு.முகமது மூசா மற்றும் குழுவினர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.
காவலர் தினம் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் 24 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்த நாள் பணியில் உள்ள காவலர்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், அவர்கள் பணியை பாராட்டியும், இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகின்றது.
அக்டோபர் 21 ஆம் தேதி, பணியில் உயிர் நீத்த, காவலர்களின் நினைவாக, மலரஞ்சலி செலுத்தி அனுசரிக்கப்படுகின்றது. இந்நாளை கொண்டாட முடியாது.
காவலர்களின் நற்செயல்களை கொண்டாட டிசம்பர் 24 ஆம் தேதி காவலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாளில் காவல் நிலையம் சென்றோ அல்லது பொது இடங்களில் பணியில் உள்ள காவலர்களிடம் சென்று இனிப்பு (சாக்லெட்) வழங்கியோ அல்லது பூங்கொத்து கொடுத்தோ ‘இனிய காவலர்கள் தின நல்வாழ்த்துக்கள்’ என்று கூறி, வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தும்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
அப்துல் ஹாபிஸ்
வண்ணாரப்பேட்டை